முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணிக்கு இப்படியொரு சிக்கல்!

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : தம்புல்லாவில் இன்று தொடங்கும் இந்தியாவுடனான ஒரு நாள் தொடரில், குறைந்தது 2 போட்டிகளிலாவது வெற்றிபெற்றால் மட்டுமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும் என்ற நிலை, இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்டுள்ளது.

தரவரிசை பட்டியல் ...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதன்படி முதல் 5 இடங்களில் தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் உள்ளன. இலங்கை அணி 8-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 9-வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 10-வது இடத்திலும் இருக்கின்றன.
குறைந்தது 2 ஆட்டங்களில் ...

தம்புல்லாவில் இன்று தொடங்கும் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் 3-வது இடத்தை தக்கவைக்க முடியும். இலங்கை அணியை பொறுத்தவரை இந்தப் போட்டியில் குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.

நேரடி தகுதி பெற ...

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், அடுத்த மாதம் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் அணிகள் மட்டுமே நேரடி தகுதி பெற முடியும். எஞ்சிய இரு இடத்திற்கு தகுதி சுற்றில் விளையாட வேண்டி இருக்கும்.

வெற்றிபெற வேண்டிய...

அந்த வகையில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால், புள்ளி எண்ணிக்கை 90-ஆக உயர்ந்து 8-வது இடத்தில் நீடிக்கும். உலக கோப்பை போட்டிக்கும் நேரடி தகுதி பெற்று விடும். இதன் காரணமாக இன்று தொடங்கும் ஒரு நாள் தொடரில் இந்திய அணிக்கு, இலங்கை அணி கடும் சவாலாக விளங்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து