முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன் நடிக்கும் ‘மாட்டுக்கு நான் அடிமை’..!

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

சினிமாவில் தாங்கள் செய்த சாதனைகளுக்காக மற்றவர்கள் கொடுக்கும் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.. அதைபார்த்து நாமும் ஏன் பட்டம் போட்டுக்கொள்ள கூடாது என திடீரென பட்டம் போட்டுக்கொண்டவர்களையும் பார்த்து விட்டோம்..

ஆனால் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக்கொண்டு வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர் ஸ்டாரை தொடர்ந்து அடுத்ததாக 'அனிமல் ஸ்டார்' என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் 'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன்.

இவர் தயாரித்து நடிக்கும் படம் தான் ‘மாட்டுக்கு நான் அடிமை’. மாட்டுக்காகவே வாழ்ந்து மாட்டுக்காகவே உயிரை விட தயாரான ஒருவனின் கதை தான் இந்தப்படம். அந்த கேரக்டரில் தான் சாம்பார் ராசன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் இரண்டு நாயகிகள்.. அதில் கோலிசோடா சீதா ஒருவர்.. இன்னொரு நாயகியாக சௌந்தர்யா என்பவர் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இளையகுமார் பி.கே. என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் நம்ம நாட்டுல மாடு நல்லா இருந்தா விவசாயம் நல்லா இருக்கும் என்கிற கருத்தை வலியுறுத்துவதாக எடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நாயகன் சாம்பார் ராசன் கோவணம் அணிந்தபடி இருக்கும் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. ஆனால் இதை பப்ளிசிட்டிக்காக பண்ணவில்லை..

தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்து கோவணம் கட்டி நடித்தது நான் மட்டுமே! கோவணம் தான் தமிழனின் பாரம்பரிய உடை. அதை அணிவதில் என்ன கூச்சமும் வெட்கமும் என்கிறார் சாம்பார் ராசன்.ஆக, நிறைய அதிர்ச்சிகளையும், ஆச்சர்யங்களையும் ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறார் இந்த 'அனிமல் ஸ்டார்' சாம்பார் ராசன்.. விரைவில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து