முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா!

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 30வது  பட்டமளிப்பு விழா  கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன்  தலைமையில் நடைபெற்றது.
ஆனந்த்  இன்ஸ்டியூட் இயக்குநர் டாக்டர்  அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள்  முனைவர் எஸ். சசிஆனந்த்,  எஸ். அர்ஜூன் கலசலிங்கம் கலசலிங்கம் பல்கலை  தலைமை  நிர்வாக  கமிட்டி  உறுப்பினர்கள்   டாக்டர்  சுவாமிநாதன்,  கே. எல்.  இ  பல்கலை  துணைவேந்தர்  முனைவர்  ஹொக்டே,   தேவி  அகல்யா பல்கலை  துணைவேந்தர்  முனைவர் ராஜ்கமல்,  பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் முன்னிலை  வகித்தனர்.  
துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர்   ஆண்டு அறிக்கையும்  கடந்த  ஆண்டு  சாதனைகள்  பற்றியும்  விளக்கினார்.
வேந்தர் முனைவர்  கே. ஸ்ரீதரன்  பட்டமளிப்பு  விழாவை துவக்கி வைத்தார்.
அசென்ச்சர் கம்பெனி  துணைத்தலைவர் வாணி சேஷாத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு  பி. டெக், பி. ஆர்க்  537பேருக்கும்,  பி ஏ,  பி பி ஏ,  பி சி ஏ,  பி எஸ் சி,  பி எட்,  58பேருக்கும்,  எம் டெக்,  எம் ஆர்க், எம் பி ஏ,  எம் சி ஏ,  எம் ஏ,  எம் எஸ் சி, எம் பில்   260பேருக்கும்,  பி ஹெச் டி 33பேருக்கும்  மொத்தம்  888 பேருக்கு பட்டங்களை  வழங்கினார்.
இதில்  வாய் பேசாத காது கேளாத மாணவர்கள் 35 பேருக்கு பி. டெக் பட்டமும், 33பேருக்கு பி ஹெச் டி பட்டமும் வழங்கப்பட்டது குறித்து  சிறப்பு விருந்தினர்  பாராட்டினார்.
டீன்  முனைவர் பள்ளி கொண்ட  ராஜசேகர்,  மற்றும் அந்தந்த  துறையை சார்ந்த  தலைவர்கள்  மாணவர்கள் பட்டியலை  வாசிக்க சிறப்பு விருந்தினர்  , பல்கலை வேந்தர்,  பல்கலை  இயக்குநர்  முனைவர்  சசிஆனந்த்  ஆகியோர்  பட்டங்களை  வழங்கினர்.
சிறப்பு  விருந்தினர்  பட்டமளிப்பு விழா பேருரையில் பேசுகையில்,  பட்டம்  பெற்றவுடன்,   எந்த  துறையில்  சென்றாலும்,  சுயதொழில்,  வேலை சமூகப்பணி எதிலும்  தொடர்ந்து  தலைசிறந்தவராக  வரவேண்டும்  என்ற குறிக்கோளுடன்  நடக்கவேண்டும்.
இதுவரை  படித்த  அறிவுகளுக்கெல்லாம்  மேலானது  இனி தொடரும்  பணியில்  கிடைக்கும்  அனுபவம்.  அதற்கு  உங்கள்  மனதையும்  வெற்றிடமாக்கி  ஆர்வத்துடன்  புதிய வளர்ச்சியை   அறிய முயலவேண்டும்.  எனவே  புதுமையைக்கற்க  நேரம்  பார்க்காது  வேலை செய்யவேண்டியதுவரும்.   பின்பு    முழுமையான   வெற்றியும்,  தலைசிறந்த  மகிழ்ச்சியும்,  உயர்வும் உங்கள் வாழ்வில்  கிடைக்கும் என்று  கூறினார்.   பல நாடுகள்  சென்று,  உலகளவில்  உள்ள வேற்றுமைகளையும் பார்த்து,  பழக்க வழக்கங்களை அறிந்து  பலவற்றை  அறியலாம்.  இன்னும்  அறிந்துகொள்ளவேண்டும்,  எளிமையைக் கடைபிடிக்கவேண்டும்  புதுமையை அறிந்து  கொண்டு படைக்கவேண்டும்  என்ற  மூன்றும் தான்  வாழ்க்கையை மலரச் செய்யும்,  சூழ்நிலையை  அறிந்து  அதற்கேற்ப  மாறவும்  கற்றுக்கொள்ளவேண்டும்.   வாய்ப்புக்கள்   பரந்து  உள்ளன.   ஆதனைப் பயன்படுத்துவதுதான்  மிக மிக முக்கியம்.  குறிப்பாக  மாணவிகள்  பட்டம் பெற்று நாடு விட்டு நாடு  சென்று  அறிவையும்  அனுபவத்தையும்  வளர்க்க   வேண்டும்.  நாட்டுக்காக   ஏதேனும்  நாம் செய்யவேண்டும்  என்ற  கடமை  உணர்வும்  இருக்கவேண்டும்  என்று  கூறினார். வாணி சேஷாத்ரி.
துறைத்தலைவர்கள்,  டீன்கள்  பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள்,  பெற்றோர்கள்,  ஊர் முக்கியப்பிரமுகர்கள்,  தொழிலதிபர்கள் அனைவரும்  திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக  பல்கலை  போர்டு ஆப் மேனேஜ்மன்ட்  கூட்டம்   நடைபெற்றது.   இதில்   வேந்தர்  முனைவர்  கே.ஸ்ரீதரன்  ,  இயக்குநர்  டாக்டர்  அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர்கள்  முனைவர் எஸ். சசிஆனந்த்,  எஸ். அர்ஜூன் கலசலிங்கம,;           டாக்டர் சுவாமிநாதன், துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர்,  பதிவாளர் முனைவர்           வெ. வாசுதேவன்,  முனைவர் ஹொக்டே,  முனைவர் ராஜ்கமல் ஆகியோர்  கலந்துகொண்டு  பட்டமளிப்பு  சிறப்பு  அங்கீகாரம்  வழங்கினர்.
விழா  ஏற்பாடுகளை  டீன்  கல்வித்துறை  முனைவர் தேவராஜ்  தலைமையில்  பேராசிரியர்குழு  சிறப்பாக  செய்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து