முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெட்சுமிபுரம் கிராமத்திற்கு ஓ.பி.எஸ் கிணறு தானம் இன்று பத்திரப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி  - பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் கிராம மக்கள் குடிநீருக்காக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுடைய கிணற்றிலிருந்து தண்ணீர் தர வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து மூன்று மணி நேரம் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. மீண்டும் தண்ணீர் போதவில்லை என்று கிராம கமிட்டியினர் முறையிட்டனர். அதனை தொடர்ந்து தனக்கு சொந்தமான கிணற்றிலிருந்து தினமும் தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளுமாறு மின்மோட்டார் சாவியையே கிராம கமிட்டியிடம் ஒப்படைத்தார். அன்றிலிருந்து சுமார் 7 மணி நேரம் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. அதுவும் போதுமானதாக இல்லை என்று கிராமத்தினர் கூறினர். இதனால் கிராமத்தினருக்கு நிரந்தர குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குன்னூர் ஆற்றிலிருந்து உறைகிணறு ஏற்படுத்தி குழாய் மூலம் தண்ணீரை கொண்டு வர 67 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பூமிபூஜை நடைபெற்று பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கிணறு உள்ளிட்ட 18 சென்ட் நிலம் லெட்சுமிபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது.   இருந்தபோதிலும் கிராமத்தினர் கிணற்றை ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் கிராமத்திற்கு தானமாக தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று முன்தினம் ஒ.பன்னீர்செல்வம் வலியுறுத்தலின் பேரில் 100 ரூபாய் பத்திரத்தில் கிணற்றை கிராமத்திற்கு தானமாக தருவதாக எழுதி, அந்த பத்திரத்தை ஜெயபாலன், கார்த்திகேயன், ரவிக்குமார், செந்தில் உள்ளிட்ட கிராம கமிட்டியினரிடம் ஒப்படைத்தார். மேலும் திங்கட்கிழமையான இன்று  பத்திரப்பதிவு செய்து தருவதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து கிராம கமிட்டியினர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.  கிராம குடிநீர் தேவைக்காக தனது சொந்த நிலம் மற்றும் கிணற்றையே தானமாக தந்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை   அனைவரும் பாராட்டினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து