இடையூறு ஏற்ப்படாத வகையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும் - டி.எஸ்.பி. வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
vinayagar

பாலையம்பட்டி -     அருபுக்கோட்டையில் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் வருகிற 26ந்தேதி அன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடைபெற உள்ள விநாயர் சிலை ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை  கூட்டம் திருச்சுழி ரோட்டில் உள்ள முத்துமணி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு தனபால் தலைமை வகிக்தார். டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர்கள் செல்லப்பாண்டியன் (குற்றப்பிரிவு), ராம்ராஜ் (தாலுகா), செல்வராஜ் (காரியாபட்டி) மயில் (மகளிர்), முருகன் (போக்குவரத்து காவல்) முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில்: சிலை வைப்பது சம்பந்தமாக ஒரு வார காலத்திற்க்கு முன்பாகவே காவல் துறை அனுமதி பெற வேண்டும், விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாகவும், சுற்று சூழல் பாதிக்கப்படாத வகையிலும், எளிதில் கரையக்கூடிய தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும். தடைசெய்யப்;பட்ட பொருட்களை கொண்டு சிலைகள் வைக்க கூடாது. பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்க்கும் இடையூறு இல்லாத வகையில், முறையான அனுமதி பெற்று சிலைகள் வைக்க வேண்டும். காவல் துறை அனுமதிக்கும் வழித்தடங்களில், நேரம் நிர்ணயித்த காலத்தில் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும்,  பிற மதத்தினர் மனதை புண்படுத்தும் வகையிலான கோஷங்களோ, வாசகங்களோ பயன்படுத்த கூடாது. சிலைகளை வாகனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும். அனுமதியில்லாமல் வைக்கப்படும் சிலைகள் எவ்வித முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.  ஆயுதங்களை எடுத்து செல்லக் கூடாது. பட்டாசுகள் வெடிக்க கூடாது. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து, நாடார் சிவன் கோவில் வரை தாளங்கள் இசைக்கவோ, கோஷங்கள் எழுப்பவோ அனுமதி கிடையாது.  அருப்புக்கோட்டை டவுண்  போலீஸ் சரகத்தில் வைக்கப்படும் சிலைகள் மட்டுமே பெரிய கண்மாயில் கரைப்பதற்கு அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட இடங்களிலேயே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். விதிமுறைகள் மீறும் பட்சத்தில் சம்பந்தபட்ட நபர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்டும் என அறிவுறத்தப்பட்டது. கூட்டத்தில்  இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜாஜி, செய்தி தொடர்பாளர் பொன்முனியசாமி, இந்து முன்னணி  அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் சிலை அமைப்பு விழா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.                     

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து