முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி-அமீத்ஷா சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பாராதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களை பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷாவும் இன்று  சந்தித்து பேசுகிறார்கள்.

டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்பில் பா.ஜ.க. முதல்வர்கள் 13 பேர், 5 துணைமுதல்வர்கள் மற்றும் முக்கியமான கேபினட் அமைச்சர்களும் கலந்துகொள்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, நிர்வாகத்தன்மை மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி பணிகள், சமூக நலப்பணிகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த பின்பு பா.ஜ.க. மாநில முதல்வர்களை 3-வது முறையாக பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் இணைந்த பின்னர் முதல்வர்களை மோடி சந்திப்பது முதல்தடவையாகும்.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் மாநில அரசுகள் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் முதல்வர்களிடமிருந்து பிரதமர் மோடியும் அமீத்ஷாவும் கேட்டறிவார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா இன்னும் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க கட்சி தலைவர் அமீத்ஷா வைத்துள்ள திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றிபெற அமீத்ஷா இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் விளக்க உள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து