முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து - பிரதமர் நரேந்திர மோடி வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதற்கு பிரதமர் நரேந்திர மோடி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசும் ரயில்வே துறையும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் மோடி உறுதி அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்கு சென்றுகொண்டியிருந்த உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலானது நேற்றுமுன்தினம் மாலை உத்திரப்பிரதேச மாநிலத்தில் முஷாபர் நகர் ரயில்வே நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வேதனையை தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து ரயில்வே அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் மோடி கூறியுள்ளார்.

உத்கல் ரயில் விபத்தால் நான் பெரும் வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். விபத்தில் உயிரிழந்த குடும்பாத்தார்களின் வேதனையில் நான் பகிர்ந்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ரயில்வே துறையும் உத்திரப்பிரதேச மாநில அரசும் தாராளமாக வழங்கும் என்றும் மோடி மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து