முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எது நடக்க இருக்கிறதோ அது இன்று நன்றாக நடைபெறும் அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : எது நடக்க இருக்கிறதோ அது இன்று நன்றாக நடைபெறும் என்று அதிமுக இணைப்பு குறித்து நிதியமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்,

சென்னை ராயபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதியமைச்சர் ஜெயகுமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறியதாவது:

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நாளை 

(இன்று)  நடக்கும், இதில் இழுபறி எதுவும் இல்லை. வியட்நாம் போர் கூட பல ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது., ஆனால் உடைந்த இயக்கம் ஒன்றுபட்டதாக சரித்திரம் இல்லை, உடைந்த இயக்கத்தை ஒன்றுபடுத்தி சரித்திரத்தை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அந்த சாதனை மீண்டும் நடைபெற உள்ளது. 1972 ஆம் ஆண்டிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட தொண்டர்கள், ஒன்றரைகோடி அதிமுக தொண்டர்கள் இந்த இணைப்பை விரும்புகிறார்கள்.
எட்டப்பர்கள்

இந்த இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் என்று சொன்ன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வார்த்தைகளுக்கு இணங்க அதிமுக ஆள வேண்டும் என்று தொண்டர்களோடு மக்களும் விரும்புகிறார்கள்.  இதற்கு எதிராக செயல்படுபவர்கள் எட்டப்பர்கள் துரோகிகள் என்று ஏற்கனவே பல பட்டங்களை கொடுத்திருக்கிறேன், வரலாற்றில் கருப்பு அத்தியாயங்களாக அவர்கள் கருதப்படுவார்கள்,

அ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல் யாரும் இல்லை. அம்மாவின் அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான முறையில் நடத்திக்கொண்டிருக்கிறார், அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையோடு முதல்வர் வழிநடத்தி வருகிறார்.  வரும் 2012 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சி நீடிக்கும், அதற்கு பிறகும் மக்களை சந்தித்து வெற்றிக்கனி பறிப்போம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்,

அப்போது  ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இருவரும்  நடிகர்கள், அவர்கள் டில்லியில் இருந்து இயக்கப்படுவதாக  ஸ்டாலின்  கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது கமல் சிறந்த நடிகர். அவரோடு சேர்ந்து ஸ்டாலினுக்கும் நடிப்பு ஒட்டிக்கொண்டது. கமல் டைரக்டராகி ஸ்டாலின் திரைப்படத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஜெயக்குமார்  தெரிவித்தார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை

அ.தி.மு.க.வின் அணிகள் இன்றைக்குள் இணைந்து ஒன்றாக செயல்படுவோம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, என்று இரண்டு குழுக்களாக  தற்போது செயல்படும் அ.தி.மு.க, எப்போது இணையும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று சென்னையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஓ.பி.எஸ் மற்றும் முதல்வர் ஈ.பி.எஸ் நேரில் சந்திப்பார்கள் என்றும் அணிகள் இணையும் என்றும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், வேலூரில் செய்தியாளர்களுக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் அணிகளாக பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க எப்போது இணையும் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், " நாளைக்குள்  ( இன்றைக்குள்)  அ.தி.மு.க அணிகள் இணைந்துவிடும். 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்க, மக்கள் அன்பைப் பெற அணிகள் இணைப்பு நடக்கும்." என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து