முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்க்களத்தில் தாக்கும் திறனை அதிகரிக்க டாங்குகளில் நவீன ஏவுகணை இணைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : போர்க்களத்தில் தாக்குதல் திறனை அதிகரிக்க டி-90 ரக டாங்குகளில் நவீன ஏவுகணைகளை பொருத்த ராணுவம் முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த டி-90 ரக டாங்குகள்தான் நமது ராணுவத்தில் உள்ளது. இதன் தாக்குதல் திறனை அதிகரிக்க ராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த டாங்குகளில் தற்போது லேசர் இன்வர் ஏவுகணை தாக்குதல் அமைப்புதான் உள்ளது. இதை அகற்றிவிட்டு நவீன முறையில் அடுத்த கட்டமான இயந்திர துப்பாக்கிகள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தும்படி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் எதிரிகளின் இலக்குகளை வெகுதூரம் மட்டுமல்லாது அதிக உயரத்திற்கும் டாங்குகளில் இருந்து ஏவுகணை சென்று தாக்கும். இந்த வகையான ஏவுகணைகளில் பகலிலும் இரவிலும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்க வல்லது.  டாங்குகளில் இருந்து 125 எம்.எம்.துப்பாக்கிகள் மூலம் இந்த நவீன ஏவுகணையை செலுத்தி தாக்க முடியும். எதிரிகளின் நடமாடும் மற்றும் மறைந்திருக்கும் ஆயுத வாகனங்களை தாக்க வல்லது. மேலும் போர்க்களத்தில் உயரமான இடத்திற்கும் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் டாங்குகளில் மோடுலர் வகை இயந்திரத்தை பொருத்தவும் ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்த வகையான இயந்திரங்கள் 1200 முதல் 1500 குதிரை சக்தி வாய்ந்தவைகளாகும்.

கடந்த பல மாதங்களாக ராணுவத்தை பலப்படுத்தும் பணியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்து பொருட்கள் மற்றும் தளவாடங்களை வாங்க துணை தலைமை ராணுவ அதிகாரிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில்  போயிங் விமான கம்பெனியிடமிருந்து ரூ.4,168 கோடியில் 6 நவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து