முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இங்கி. வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

பிர்மிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் நடந்த முதல் பகல் - இரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் 209 ரன்கள் வித்தியாசத்தில் அவர்கள் வெற்றி பெற்றனர். 

இப்போட்டியில் தனது 384 ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஸ்டூவார்ட் பிராட் இங்கிலாந்தின் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் எனும் தகுதியை பெற்றார். இதற்கு முன்னர் இயான் போத்தம் 383 விக்கெட்டுகளை வீழ்த்தி அவ்விடத்தில் நிலைத்திருந்தார். பிராட் தனது சாதனையை முறியடிப்பதை போத்தம் நேரில் கண்டு பாராட்டினார்.

168 ரன்களுக்கு ...
முதலில் விளையாடிய இங்கிலாந்து 514 ரன்களை எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. ஆண்டர்சனும், டோபியும் சிறப்பாக பந்து வீசி மேற்கிந்திய தீவுகள் அணியை 168 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர். பின்னர் தனது இரண்டாவது இன்னிங்க்சை ஆட கேட்டுக்கொள்ளப்பட்ட மேற்கு இந்திய அணியினர் பிராட்டின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொள்ள இயலாமல் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அந்த அணியின் சார்பில் ஜெர்மைன் பிளாக்வுட் மட்டுமே முதல் இன்னிங்சில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணியில் அலிஸ்டார் குக் 243 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மொத்த போட்டியும் மூன்றே நாட்களில் முடிந்து போனது. அடுத்த போட்டி லீட்ஸ்சில் நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து