முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோதா பரிந்துரைகளை ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் பின்பற்றவில்லை - முன்னாள் வீரர் அசாருதீன் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் லோதா பரிந்துரைகளை பின்பற்றவில்லை என்று முன்னாள் இந்திய அணி கேப்டன் அசாருதீன் குற்றம்சாட்டியுள்ளார்.

அசாருதீன் வழக்கு  ...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் விளைாடிய காலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ இவருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து அசாருதீன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணையில் சூதாட்டத்தில் அசாருதீனுக்கு தொடர்பில்லை என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

சிங்கம் நிராகரிப்பு ...

இருந்தாலும் பிசிசிஐ அசாருதீனை விலக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தலைவர் தேர்தல் போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார். அதை அச்சங்கம் நிராகரித்தது. இந்நிலையில் ‘‘மொயின்-உத்-தவ்லா கிரிக்கெட் தொடருக்கான ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட இரண்டு அணிகளிலும் உள்ள வீரர்கள் இரண்டு நாட்கள் லீக்கில் மூன்று சதங்களுக்கு மேல் அடித்துள்ளனர்.

கடைபிடிக்கவில்லை ...

ஐந்து விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளது மிகவும் துரதிருஷ்டவசமானது. தகுதியான வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். லோதா கமிட்டி பரிந்துரையின்படி தேர்வாளர்கள் குறைந்தது 25 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும். தேர்வாளர்களை நியமிக்கும்போது இந்த விதிமுறை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி லேதா கமிட்டி பரிந்துரைகள் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்குதான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. இதை மீடியாக்கள் வெளிக்கொண்டு வரவேண்டும்’’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து