முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என் மனபாரம் குறைந்துவிட்டது ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஆன்மாவே அணிகளை இணைத்தது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.  மேலும் கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

என் மனபாரம் குறைந்துவிட்டது என்றும் அவர் உருக்கமாக பேசினார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நேற்று ஓ.பிஎ.ஸ் அணியினரும், எடப்பாடி பழனிசாமி அணியினரும் வருகை தந்தனர். ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கிக் கொண்டனர்.  அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும், மக்களும் எதிர்பார்த்தபடி  நேற்று அதிமுகவின் இரு அணிகளும்  இணைந்தன. தலைமைக் கழகத்தில் நடந்த இந்த விழாவில்  ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
ஒருதாய் மக்கள்

''உலக அரசியல் அரங்கில் அதிமுக சரித்திர சாதனையை உருவாக்கி உள்ளது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அதையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்க தொண்டர்களின் விருப்பத்துக்கிணங்க இணைந்திருக்கிறோம்.
ஒரு தாய் மக்களின் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது. இந்த இணைப்புக்கு உதவிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவரையும் மீண்டும் காண ஜெயலலிதாவின் ஆன்மா வழிவகுத்துள்ளது.

என் மனபாரம் குறைந்தது
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்நாள் முழுவதும் இயக்கத்துக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இன்றுடன் என் மனபாரம் குறைந்துவிட்டது'' என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். இந்த இணைப்பு  விழா நடந்ததை அடுத்து அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து