முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் காங். எம்.எல்.ஏ.க்களுடன் சோனியா- ராகுல் சந்திப்பு: ஒற்றுமையாக செயல்படுவதற்கு பாராட்டு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :  குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சோனியாவும், ராகுல் காந்தியும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின்போது ராஜ்யசபை தேர்தலின்போது எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட்டதற்கு இரண்டு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மகாத்மா காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில் உண்மைக்காகவும் கொள்கைக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என்றும் எம்.எல்.ஏ.க்களை சோனியாவும் ராகுல்காந்தியும் கேட்டுக்கொண்டனர்.

குஜராத் மாநிலத்திலிருந்து ராஜ்யசபைக்கு 3 பேரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி போட்டியிட்ட ராஜ்புத்வை வெற்றிபெற செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி நடந்தது. குஜராத் மாநிலத்தில் செல்வாக்குள்ள காங்கிரஸ் தலைவர் வகேலா கட்சியிலிருந்து விலகியதோடு 6 எம்.எல்.ஏ.க்களையும் இழுத்துச்சென்றுவிட்டார்.

இதனால் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட அகமது படேல் வெற்றிவாய்ப்பை பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். தேர்தலின்போதுதான் குஜராத் மாநிலத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

தேர்தலின்போது வாக்களித்ததை அதிகாரம் இல்லாத ஏஜண்டிடம் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காட்டியதால் அந்த வாக்குகள் செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனையொட்டி அகமது படேல் வெற்றிபெற்றதாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது. இதற்கு கடவுளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்தநிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை டெல்லி வரவழைத்து அவர்களை சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் சந்தித்து பேசினர். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது ராஜ்யசபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக செயல்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் உண்மைக்காகவும் கொள்கைக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களை சோனியாவும் ராகுல் காந்தியும் கேட்டுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் அரசியல் விவகாரத்தை கவனிக்கும் அசோக் ஹெலட், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் நடந்த இந்த சந்திப்பு மிகவும் நல்லதாக இருந்தது என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அகமது படேல் வெற்றிபெற்றிருப்பது உண்மை, கொள்கை, ஜனநாயகம் ஆகியவற்றிருக்கு கிடைத்த வெற்றியாகும் என்றும் ராகுல் மேலும் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து