முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்த நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தோம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்த  நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தோம் என்றும்,  இரண்டு முறை உடைந்து பின் இணைந்த ஒரே கட்சி அ.தி.மு.க.தான் என்றும் அதன்  இணைப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. பிறகு
ஒருவழியாக  முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்களான ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு  நேற்று வந்தனர். இதனைத் தொடர்ந்து 2 அணிகளும் இணைந்தன.

பின்னர், இணைப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி பேசியதாவது:
இந்தக் கட்சி மீண்டும் இணையும் என்ற உயர்ந்த எண்ணத்தில் செயல்பட்டோம். நாங்கள் உறுதியாக இருந்ததால் இணைப்பு சாத்தியமாகியுள்ளது. அனைத்துத் தொண்டர்களின் எண்ணத்தின் விருப்பத்தை ஏற்று நாங்கள் இணைந்துள்ளோம்.

இணைந்த வரலாறு கிடையாது
இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் எல்லாம் பிரிந்த பின்னர் இணைந்த வரலாறு கிடையாது. அ.தி.மு.க மட்டும்தான் மக்களோடு மக்களாக இருந்து, கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பேசி தீர்த்து ஒற்றுமையை ஏற்படுத்தி கட்சியை வலுவாக்கியுள்ளோம்.

சம்மட்டி அடி
அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்திக் கொண்டு இடையில் புகுந்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் சம்மட்டி அடி கொடுத்துள்ளோம். எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் லட்சியங்களை நிறைவேற்ற ஒன்றிணைந்துள்ளோம்.

இன்று முதல் எந்தச் சூழ்நிலையிலும், கருத்து வேறுபாடு வந்தாலும், இணைந்து செயல்படுவோம் என்று பேசினார் முதல்வர் பழனிச்சாமி. அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் பெயர்களை அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து