7வது உலக குள்ளர்களுக்கான நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற கணேஷ் மனோஜ்க்கு, கலெக்டர் பாராட்டு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      மதுரை
mdu news

  மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனுக்களை அளித்தனர்.
 இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 89 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 44 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 23 மனுக்களும், முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 108 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 39 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 7, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 19 மனுக்களும், ண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 27 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாகவும், தொழிலாளர் நல வாரியம் தொடர்பாகவும் 35 மனுக்களும் மற்றும் இதர 49 மனுக்களும் என மொத்தம் 440 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக மதுரை மாவட்டம், ்பரங்குன்றம் வட்டம், கோ.புதுப்பட்டி கிராமத்தில் 5 கண்பார்வையற்ற நபர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவிற்கான ஆணைகளையும், பார்வையற்றோர் மறு வாழ்வு நலச்சங்கத்திற்கு 344 ச.மீ பரப்பளவில் பயிற்சிக் கூடம் அமைக்க இடத்திற்கான ஆணையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்றவர்களின் மகன்களின் கல்விக்காக ரூ.5500 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலையினையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்தினால் மரணமடைந்த 5 நபர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.7.65 இலட்சம் மதிப்பில் நிவாரணத் தொகைக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக கனடாவில் நடைபெற்ற 7வது உலக குள்ளர்களுக்கான நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட கணேஷ் என்ற வீரர் 3 தங்கமும், மனோஜ் என்ற வீரர் 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களும் பெற்றதையொட்டி, வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து பாராட்டு பெற்றனர்.
       இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சாந்தா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து