விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து நிதிஉதவி

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
rmd news -1

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து காசோலைகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன்பின்பு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.5.5 லட்சத்திற்கான  காசோலைகளை வழங்கினார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.   தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த முதுகுளத்தூர் வட்டம், கோடாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷம் என்பவரின் மனைவிக்கு ரூ.3லட்சம் காசோலையினையும்,  சாலை விபத்தில் இறந்த பரமக்குடியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் கமுதி வட்டம், சம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.கருப்பையா ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.ஒரு லட்சம்  என மொத்தம் ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும் , கிணற்றில் தூர்வாறும் போது மூச்சுத்திணறி உயிரிழந்த ராமநாதபுரம் வட்டம், காரான் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவிக்கு ரூ.50ஆயிரத்திற்கான காசோலையினையும்  ஆக மொத்தம் 4 பயனாளிகளுக்கு ரூ. 5.5 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
 இக்கூட்டத்தில்; சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து