முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் சதம்: தவானுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

தமுல்லா : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 71 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த தவானுக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்தியா வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமுல்லாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை 43.2 ஓவரில் 216 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் டிக்வெலா அதிகபட்சமாக 74 பந்தில் 64 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், பும்ரா, யசுவேந்தரா சஹால், கேதர் ஜாதவ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இந்தியா 28.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர் தவான் 90 பந்தில் 132 ரன்னும் (20 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் விராட் கோலி 70 பந்தில் 82 ரன்னும் (10 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். தவான் 71 பந்தில் சதம் அடித்து அதிரடி முத்திரை பதித்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிவேக சதம் இதுவாகும்.

தவானுக்கு பாராட்டு

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3 மாதமாக தவான் சிறப்பான முறையில் பேட்டிங் செய்து வருகிறார். போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று கடைசி வரை களத்தில் நிற்பது முக்கியமானது. அந்த பணியை தான் தவான் செய்தார். ஆல்ரவுண்டர் என்ற முறையில் அக்‌ஷர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.அவரது பந்து வீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. 2019 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அணியில் ஏராளமான மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்னும் 24 மாதங்கள் இருந்தாலும் முன்னதாக அணியை தயார்படுத்த திட்டமிட்டு உள்ளோம். சோதனை முறையில் மாற்றங்களை செய்து பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து