முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: டிமிட்ரோவ் - முகுருசா பட்டம் வென்றனர்

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      விளையாட்டு
Image Unavailable

சின்சினாட்டி : சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் டிமிட்ரோவ் ஆண்கள் பிரிவில் பட்டத்தை வென்றார்.

உலகின் ஏழாம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் தன்னை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்கியாஸை 6-3, 7-5 என்ற நேர் செட்டுகளில் தோற்கடித்தார். டிமிட்ரோவ்வின் ஆட்டங்களில் இதுவே சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

இருபத்தாறு வயதாகும் டிமிட்ரோவ் இதுவரை ஏழு பட்டங்களை வென்றுள்ளார். கிர்கியோஸ் நன்கு விளையாடினாலும், ராஃபேல் நாடாலை காலிறுதியில் தோற்கடித்த போது காட்டிய அத்தனை திறமையையும் காட்டி விளையாடவில்லை. ஆட்டத்தின் கடைசி கேம்களில் அவர் பிரேக் பாயிண்டுகளை எடுத்தாலும் டிமிட்ரோவ் அவரை வென்றெடுத்தார்.

முகுருசா பட்டம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் சாம்பியனான கார்பின் முகுருசா பட்டம் வென்றார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரான சிமோனா ஹாலெப்பை 6-1, 6-0 என்ற கணக்கில் வென்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் மட்டுமே நீடித்தது. உலகத் தர வரிசையில் முகுருசா நான்காம் இடத்தில் இருக்கிறார்.  இந்த வெற்றி மூலம் ஹாலெப்பிற்கு எதிரான ஆட்டங்களில் 3-1 என்ற கணக்கில் முகுருசா முன்னிலை வகிக்கிறார்.  இத்தோல்வி மூலம் ஹாலெப் உலகின் முதல் நிலை வீரராக ஆகும் வாய்ப்பையும் நழுவ விட்டுள்ளார். கரோலினா ள்பிஸ்கோவா முதல் நிலை வீரராக விளங்கி வருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து