முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்கல் ரயில்விபத்து: செயலாளர் உள்பட 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை

திங்கட்கிழமை, 21 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உத்கல் எக்ஸ்பிரஸ் பயணிகள் விபத்துக்குள்ளானது தொடர்பாக செயலர் உள்பட 8 உயர் அதிகாரிகள் மீது மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 19-ம் தேதி அன்று ஒடிசா மாநிலத்தின் புனித ஸ்தலமான பூரியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான ஹரித்வாருக்கு உத்கல் எக்ஸ்பிரஸ் பயணிகள் சென்று கொண்டியிருந்தது. ரயிலானது உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள முஷாபர் நகருக்கு அருகில் சென்றுகொண்டியிருந்தபோது ஹசாவ்லி என்ற இடத்தில் ரயில் தடம்புரண்டது. இதில் 14 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச்சென்றுவிட்டன. அதில் ஒரு பெட்டியானது உருண்டு சென்று ஒரு வீடு மீது மோதியது. ரயிலானது சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுகொண்டியிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. தடம்புரண்ட பெட்டிகளில் 8 பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தன. அந்த பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்க இரவு 2 மணிக்கும் மேலாகிவிட்டாது.

ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 150-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்துக்கு அதிகாரிகள், ஊழியர்களின் மெத்தன போக்குதான் காரணம் என்று  ரயில் போக்குவரத்து வாரிய உறுப்பினர் முகமத் ஜாம்ஷெட் தெரிவித்தார். உடனே  பிராந்திய ரயில்வே வாரிய செயலாளர் உள்பட 8 உயரதிகாரிகள் மீது ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ரயில்வே வாரிய உறுப்பினர் ஆதித்யா குமார் மித்தல், வடக்கு பிராந்திய ரயில்வே மேலாளர் ஆர்.கே. குல்ஷெரஸ்தா, டெல்லி டிவிஷனல் மேனேஜர் என். சிங், ஆகியோர் விடுமுறையில் செல்லும்படி மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் டெல்லி டிவிஷனல் பொறியாளர் ஆர்.கே. வர்மா, உதவி பொறியாளர் ரோஹித் சர்மா, பொறியாளர் பிரதீப் குமார், மற்றும் உயரதிகாரி கவுதாலி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள மித்தல், செயலர் மட்டத்தில் உயரதிகாரியாவார். இந்த மாதிரி உயரதிகாரிகள் விடுமுறையில் செல்லும்படி உத்தரவிட்டிருப்பது முதல்தடவை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள குல்ஷெரஷ்த்ராவும் சிங்கும் நேற்றுமுன்தினம் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ரயில்தண்டவாள பராமரிப்பு தலைமை அதிகாரி அலோக் அன்சால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானதாகும். உத்கல் ரயில் விபத்துமாதிரி மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரயில் விபத்தை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தன்னை அடையாளம் கூறிக்கொள்ள விரும்பாத ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தண்டவாளம் ஆக்க்ஷா பிளேடால் வெட்டப்பட்டிருப்பதால் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதுதான் ரயில் விபத்துக்கு காரணமாகும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிஷ் பிளேட்டும் நட் போல்ட்டும் சரியாக இணைக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் விபத்தில் காயம்மடைந்த பயணிகளில் 50 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மீதி 102 பேர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று உத்திரப்பிரதேச கேபினட் அமைச்சர் சதீஷ் மஹனா லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து