முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தெற்காசிய நாடுகளுடான அமெரிக்காவின் உறவு குறித்து பேசியதாவது, “பாகிஸ்தானுக்கு பல்வேறு நிதி உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

ஆனால் பாகிஸ்தானோ அமெரிக்கா எதிர்த்து சண்டையிட்டு வரும் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்தால் பல இழப்புகளை சந்திக்க நேரிடும். அடுத்த முறை பாகிஸ்தானை நாங்கள் அணுகும் விதம் வேறாக இருக்கும்.

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதைக் கண்டு நாங்கள் இனி அமைதி காக்கப் போவதில்லை. பாகிஸ்தானில் மக்கள் பயங்கரவாத தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிராக அம்மாக்களின் பங்களிப்புகளையும், தியாகங்களையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம். அந்த பிராந்தியத்திலுள்ள தாலிபன்கள் மற்றும் பிற தீவிரவாத அமைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 ஆப்கானிஸ்தானில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதில் இந்தியா எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.  தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முக்கிய பங்களிக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து