முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகளின் மீது கார் மோதி பெண் பலி பிரான்ஸில் தீவிரவாத தாக்குதலா?

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

 பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் மார்செய் நகரில் அடுத்தடுத்து 2 பேருந்து நிறுத்தங்களில் நின்றவர்கள் மீது ஒரு கார் மோதியது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இது தீவிரவாத தாக்குதலா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது வாகனங்களை மோதி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 17-ம் தேதி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் பாதசாரிகள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் வேனை மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் மார்செய் நகரில் நேற்று அதிவேகமாக வந்த கார் அடுத்தடுத்து 2 பேருந்து நிறுத்தங்களில் நின்ற பயணிகள் மீது மோதியது. இதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். காரை ஓட்டிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து