முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீல நிறமாக மாறிய தெருநாய்: தனியார் சாய நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா சீல்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை: டியுகோல் ஆர்கானிக்ஸ் & கலர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது. தண்ணீரில் சாயத்தைக் கலந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சாயக்கசிவினால் நவி மும்பையில் தலோஜாவில் தெருநாய் ஒன்று நீல நிறமாக மாறியுள்ள  புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாக  வெளிவந்தன, அதன் அடிப்படையில் டியூகோல் ஆர்கானிக்ஸ் நிறுவனத்துக்கு மகாராஷ்டிரா மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.

ரசாயனம் சுத்திகரிக்கப்படாமல் நதிக்குள் விடப்பட்டதாக இந்நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டை பவுடர் காற்றில் மாசைப் பெரிய அளவில் கலந்தன. இதனால்தான் தெருநாய் ஒன்றின் நிறம் நீலமாக மாறியது, என்று மகாராஷ்டிரா மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி அனில் மொஹேகர் தெரிவித்தார்.

இவர் மேலும் கூறும்போது இந்த நிறுவனத்துக்கு அருகில் சுற்றித்திரிந்த ஒரு நாயின் நிறம் நீலமாக மாறியது, நிறுவனத்தின் காற்று மாசுக்கட்டுப்பாட்டு அமைப்புகள் செயலில் இல்லை என்பதால் இது நிகழ்ந்துள்ளது என்றார்.

இம்மாதிரி சாயப்பட்டறைகளினால் விலங்கினம் மட்டுமல்ல மனித உயிருக்கும் கேடு ஏற்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல்கள் எழுப்பி வருகின்றனர்.
சாயம் கலந்த நீரில் விழுந்த நாய் ஒன்றின் உடலில் தீக்காயங்கள் இருந்ததாகவும் அந்த நாய் கண்பார்வையை இழந்ததாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.  இது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து