தொழில் முனைவோருக்கான எரிசக்தி கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
rmd news

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் தொழில் முனைவோருக்கான எரிசக்தி விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான எரிசக்தி மற்றும் மின்சக்தி சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-  இந்திய தேசத்தின் முதுகெலும்பாக விவசாயம் கருதப்படுகிறது.  அதற்கடுத்தபடியாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தங்களது தொழில்திறன் மற்றும் உற்பத்திதிறனை மென்மேலும் அதிகரித்திட எரிசக்தி மற்றும் மின்சக்தியினை சிக்கனமாக பயன்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.  மின்சக்தி  தேவைக்கும்  மின்சக்தி நுகர்வுக்கும் இடையேயான இடைவெளியினை கண்டறிந்து, எந்தெந்த வகையில் மின்சிக்கனத்தினை ஏற்படுத்திட முடியும் என்ற வழியினை ஆராய்ந்து  செயல்படுத்துவதன் மூலம் தொழில்முனைவோர்களது தொழில்திறன் மேம்படும். உதாரணத்திற்கு முந்தைய காலகட்டங்களில் வெண்சுடர் எரிவிளக்குகள்  குண்டு பல்பு  பயன்படுத்தப்பட்டு வந்தன.  மின்சிக்கனம் கருதி இதற்கு மாற்றாக ஒளிரும் விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போதைய காலகட்டத்தில் இதற்கும் மாற்றாக எல்.இ.டி பல்புகள் போன்ற கூடுதல் மின்சிக்கன விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
 தமிழ் நாட்டில் மொத்தம் 15.61 லட்சம் எண்ணிக்கையிலான பதிவுபெற்ற சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் மொத்தம் 99.78 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இதுதவிர, மாவட்ட தொழில்மையத்தின் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுய தொழில் துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2016-2017ஆம்  நிதியாண்டில்  நீட்;ஸ் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்துவதில் இராமநாதபுரம் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு 27 இளைஞர்களுக்கு மொத்தம் ரூ.192 லட்சம் மதிப்பிலான மானியத்தில் கடனுதவி வழங்கியதன் மூலம் தமிழ்நாட்டில்  நான்காவது இடத்தில் உள்ளது. 
 அதன் தொடர்ச்சியாக தற்போது மாவட்ட தொழில் மையத்தின் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி சிக்கனத்தினை ஊக்கப்படுத்திடும் வகையில் புதிய திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்களில் எரிசக்தி மற்றும் மின்சக்தி சிக்கனம் குறித்த தணிக்கை மேற்கொள்ள தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்திடும் வகையில் ஆற்றல் சிக்கன மேம்பாடு குறித்த தணிக்கைக்கு 50 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.75ஆயிரம்) பழைய இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்கள் நிறுவி மின்சிக்கனத்தினை அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு இயந்திர முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.2 லட்சம்) மானியம் வழங்கிட  வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் இந்த திட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்தி காலத்திற்கேற்றவாறு மின்சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.
 இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், தமிழ்நாடு மின்சாரவாரிய கண்காணிப்புப் பொறியாளர் கே.சின்னத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எஸ்.சுரேஷ் பாபு, நபார்டு வங்கியின் துணை மேலாளர் திரு.எஸ்.மதியழகன், துணை இயக்குநர் மு.உதயராஜ், வங்கி மேலாளர்கள் திரு.குணசேகரன், குசலவன் (பாண்டியன் கிராம வங்கி) உள்பட அரசு அலுலவர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து