முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தம்: 75 சதவீத பணபரிவர்த்தனை பாதிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி, பொதுத்துறை வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 75 சதவீத வங்கி பண பரிவர்த்தனைகள் பாதித்தன. 

பொதுத்துறை வங்கிகளை இணைக்கக்கூடாது,  வராக்கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும், உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் தேசிய வங்கிகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும், அதிக நேரம் வேலை செய்வதற்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாவிட்டால் அதை கிரிமினல் குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற கமிட்டி சிபாரிசை நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

வேலைநிறுதத்தை வாபஸ் பெறும் வகையில் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனைத்தொடர்ந்து வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பாக திட்டமிட்டபடி நேற்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் 9 வங்கி யூனியன்கள் உள்ளன. அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி ஊழியர்கள் தேசிய அமைப்பு உள்பட 9 வங்கிகள் ஐக்கிய அமைப்பில் உள்ளன.

வேலைநிறுத்தத்தில் ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட  10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர். இதனால் வங்கி பணிகள் கடுமையாக பாதித்தன. வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது, வங்கிகளில் இருந்து பணம் எடுத்தல், காசோலை மாற்றம் உள்பட பல்வேறு பணிகள் பாதித்தன. அதேநேரத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஆக்ஸிஷ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி ஆகிய தனியார் வங்கிகள் இயங்கின. இந்த வங்கிகளில் வழக்கமான பணிகள் நடைபெற்றன.

நாட்டில் உள்ள 21-க்கும் மேற்பட்ட பொதுத்துறையை சேர்ந்த வங்கிகளில் 75 சதவீதத்திற்கும் மேலாக பணபரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து