முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மழை வெள்ளத்துக்கு இது வரை 86 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப்பிரேதசம் மாநிலத்தில் வெள்ளத்தால் இது வரை 86 பேர் பலியாகினர். மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர்.

2 ஆயிரம் கிராமங்கள் ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 ஆயிரம் கிராமங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கின. இதுவரை வெள்ளத்தால் 86 பேர் இறந்துள்ளனர். 2.2 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணி தீவிரம்

இந்திய விமானப் படை, ராணுவம், துணை ராணுவம் மற்றும் போலீஸ் படைகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் நேபாளம் நாட்டின் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீராலும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற வாரம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விரைவில் மீட்பு பணிகளை தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து