முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஜம்மு-காஷ்மீர் கவர்னர் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் என்.என். வோரா நேற்று புதுடெல்லியில் சந்தித்து பேசினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினர், தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவத்தினர் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜம்மு-காஷ்மீர் மாநில கவர்னர் வி.வி.வோராவை சந்தித்தி பேசினார். அப்போது காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதையும் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியையும் அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் வோரா விளக்கினார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் தீவிரவாதிகள் பக்கம் இளைஞர்கள் சேருவதை தடுக்கவும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்நாத் சிங்கிடம் வோரா விளக்கமாக எடுத்துக்கூறினார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. 

இந்தாண்டு கடந்த 1-ம் தேதி முடிய பாகிஸ்தான் ராணுவத்தினர் 285 தடவைகள் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் 228 தடவைகள் போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டனர். இது இந்தாண்டைக்காட்டிலும் குறைவாகும். இந்தாண்டில் வரும் மாதங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபடலாம். அதனால் அத்துமீறல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

கடந்த 8-ம் தேதி அன்று ஜம்மு பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகதி, நவ்ஷெரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். கடந்த 12-ம் தேதி ஜம்மு பகுதியில் உள்ள பூஞ்ச் பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகில் உள்ள ஒரு கிராமம் மீது  பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டதில் 40 வயது பெண் ஒருவர் பலியானார்.

கடந்த 13-ம் தேதி கிருஷ்ணகதி, நவ்ஷெரா மற்றும் மான்கொடே ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 3 முறை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் 3 பேர் பலியானார்கள்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து