திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனி கிளை நூலகத்தில் நூலகர் தினவிழா

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
dindugal news 1

திண்டுக்கல், - திண்டுக்கல் அருகிலுள்ள என்.ஜி.ஓ. காலனி கிளை நூலகத்தில் நூலகத்தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த நாள் விழா மற்றும் நூலகர் தினவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இலவச அக்குபஞ்சர் தொடு சிகிச்சை முகாம் நடைபெற்றது. டாக்டர்கள் அனிதா, மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.நூலக புரவலர்கள் மோகன், சுசீலா தம்பதியினர், சிவக்குமார், பசுமை விகடன் மாதஇதழ் ஆசிரியர் தமிழ்வாணன், நூலக அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் சரவணக்குமார், கணக்கர் ஜெயராமன், நூலகர் கார்த்திகாயினி உட்பட பலர் கலந்துகொண்டனர். நிறைவில் புரவலர் முனியாண்டி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து