முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் அறிவியல் படைப்பு கண்காட்சி கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்து கொண்டார்

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற அறிவியல் படைப்பு கண்காட்சியில் கலெக்டர் முனைவர் நடராஜன் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
 ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவித்து அவர்தம் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்போடு ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளை சார்பாக மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் மூலம் தயாரிக்கப்படும் புதிய அறிவியல் படைப்புகள் குறித்த கண்காட்சி நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியானது வரும் 31.08.2017 வரையிலான நாட்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளைத் தேர்வு செய்து பள்ளிக்கு ஒரு நாள் வீதம் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவித்திடும் வகையில் நடத்தப்படவுள்ளது.  அதனடிப்படையில் ராமநாதபுரம் வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 6,7,8 ஆம் வகுப்பு மாணவியர்கள் பங்கேற்ற அறிவியல் படைப்புகள் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் கலந்து கொண்டு மாணவியர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு,  விளக்கங்களை கேட்டறிந்தார்.
 இக்கண்காட்சியில் எளிமையான சாதனங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தானியங்கி தீயணைப்பு கருவி, மின்சிக்கன கருவி உள்ளிட்ட பல்வேறு புதுமையான படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இக்கண்காட்சியினைப் பார்வையிட்ட கலெக்டர் எளிமையான முறையில் ஆக்கப்பூர்வமான புதிய அறிவியல் படைப்புகளை தயாரித்துள்ள மாணவியர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் இதேபோல மனித வாழ்க்கைக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் உறுதுணை புரியும் வகையில் பல்வேறு புதிய அறிவியல் படைப்புகள்  தயாரித்திடும் வகையில் புதுமையான தகவல்களை கற்றறிந்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
 இந்நிகழ்ச்சியில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை விசுவாசம், ‘வீட்டுக்கு வீடு விஞ்ஞானி” அறக்கட்டளையின் தலைவர் ஆர்.கார்த்திகேயன், செயலாளர் பாலமுருகன் உள்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து