முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய 2000 ரூபாய் நோட்டை ஒழிக்க திட்டமா ? அருண்ஜெட்லி திட்டவட்ட மறுப்பு

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டை ஒழிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி திட்டவட்டமாக கூறினார்.
உயர்மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனால் ஏற்பட்ட ரூபாய் நோட்டு புழக்க தட்டுப்பாட்டை போக்க புதியதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வெளியிடப்பட்டது. மேலும் புதியதாக ரூ.200 நோட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது. அதனால் புதியதாக வெளியிடப்பட்ட ரூ.2000 நோட்டுக்கு ஒழிக்கும் திட்டம் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளதா? என்று நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் கேட்கப்பட்டது. அந்தமாதிரியான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

புதிய ரூ.200 நோட்டு வெளியிடும் காலத்தை இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். புதிய ரூ200 நோட்டு அடிக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. ரூ.50 மற்றும் ரூ.100 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால்தான் புதிய ரூ.200 நோட்டு வெளியிட மத்திய அரசு அனுமதி கொடுத்தது. புதிய ரூ.200 நோட்டு எப்போது அச்சடிக்கப்படும், எப்போது புழக்கத்திற்கு வெளியிடப்படும் உள்பட அது தொடர்பான அனைத்து விஷயங்களும் இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்ததே. புதியதாக அச்சடிக்கப்படும் ரூ.200 நோட்டு எப்போது வெளியிடப்படும் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பதுதான் சரியானதாக இருக்கும் என்றும் பேட்டியின்போது அருண்ஜெட்லி மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து