முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தமிழக அரசு புதிய சலுகை அறிவிப்பு

புதன்கிழமை, 23 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : வேலைவாய்ப்பு பதிவை மேலும் ஐந்தாண்டுகளுக்கு புதுப்பிக்க தமிழக அரசு புதிய சலுகையை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமியின் ஆணையின்படி தொழிலாளர் நலத்துறை அமைச்சர், நிலோபர் கபீல், கடந்த ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆகியஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத்தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசின் அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறவிரும்பும் மனுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 22-ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 21.11.2017-க்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொடர்புடைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு நேரில் செல்ல இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் பதிவஞ்சல் மூலமாக புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாகவும் நவம்பர் 21-ம் தேதிக்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து