குஜராத்-கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்: தலைவர் அமீத்ஷா அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 ஆகஸ்ட் 2017      அரசியல்
amithsa

புதுடெல்லி, குஜராத், கர்நாடகம் மாநிலங்களில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா பொறுப்பாளர்களாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநில சட்டசபையின் நடப்புக்காலம் வரும் ஜனவரி 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையொட்டி அந்த மாநில சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா பொறுப்பாளராக மத்திய நிதி அமைச்சராக இருக்கும் அருண்ஜெட்லி நியமிக்கப்பட்டுள்ளார்.  அதேமாதிரி கர்நாடக மாநிலத்தில் நடப்பு சட்டசபை காலம் வரும் 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படவேண்டும். அதாவது வருமாண்டு மே மாதம் தொடக்கத்தில் தேர்தல் நடக்கலாம். இதனையொட்டி பாரதிய ஜனதா சார்பாக தேர்தல் பொறுப்பாளராக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத்ஷா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து