முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு _பக்தர்கள் பரவசம்

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல்லில் 32 அடி உயர விநாயகருக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் கோபால சமுத்திரம் கரையில் அமைந்துள்ள 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் அமைந்துள்ள பிரபலமான 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் 108 நன்மை தரும் விநாயகருக்கு பக்தர்களே பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். காலையில் இருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல் ஸ்ரீஅபிராமி அம்மன் கோவில், ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், நவசக்தி விநாயகர், வழிவிடும் விநாயகர், கற்பக விநாயகர் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களிலும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுதவிர வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் உற்சாகமாக கொண்டாடப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள், பூஜைக்கு பயன்படுத்தும் பழங்கள், பொரி, வாழை இலை போன்றவை விலை கூடுதலாக விற்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. திண்டுக்கல் நகரில் மட்டும் 80 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்து சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்திலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் நகரில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக நகரின் முக்கிய வீதிகளில் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பும் நடந்தது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து