முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோவிலில் வித்தக விநாயகருக்கு 16 வகையான அபிஷேகம்

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை- -பிரசித்தி பெற்ற ஆறாவதுபடை வீடு சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது நேற்று இக்கோவிலில் நடந்தது. இதில் சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வித்தக விநாயகருக்கு பால், பழம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள்,அலங்காரம்,தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் மூஷிக வாகனத்தில் வித்தக விநாயகர் எழுந்தருளி புறப்பாடானார். பின்னர் மூலவர் சன்னதியை சுற்றி உள்ள பிரகாரத்தின் வழியாக சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்திற்கு சென்று சுவாமி இருப்பிடம் சேர்ந்தது.
முன்னதாக மூலவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தகவிநாயகர், மற்றும் வேல் சன்னதிகளில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய்விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு போன்ற பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மற்றும் முருகன் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து