முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி பெத்தாட்சி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா

வெள்ளிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

தேனி - தேனியில் பிரசித்தி பெற்ற  பெத்தாட்சி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில் விநாயகருக்கு திருமஞ்சணம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகருக்கு பொங்கல் வைத்தும், கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்கள் படையிலிட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெத்தாட்சி விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
 பெரியகுளம் போஸ்ட் ஆபிஸ் பிள்ளையார் கோவில் : பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்தரும் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து