முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 29 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

  தேனி.- தேனி மாவட்டம், பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில்   உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், நமது நாட்டில் முதன்முதலாக 1872-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கீடப்பட்டது. அதனடிப்படையில், பத்தாண்டுகளுக்கு ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. 1987-ஆம் ஆண்டு ஜுலை-11-ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. இதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜுலை-11 ஆம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பிறத்திட்டங்களை தீட்டவும் அவற்றை நடமுறைக்கு கொண்டு வரவும் சாத்தியமாகிறது. குழந்தைகளில் பிறப்பு இறப்பு விகிதத்தினை கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கீடு செய்யப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை இருந்தால் அக்குழந்தையினை கஷ்டபடாமல் வளர்த்திட முடியும். உலக அளவில் அதிக இளைஞர்களையும், மனித வளத்தினையும் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்துவருகிறது. தொழில் புரட்சியை ஏற்படுத்திட அனைவருக்கும் திறன் பயிற்சி அளித்திட வேண்டும். எந்த ஒரு வேலையிலும் பயிற்சி அளித்து தனித்திறமையினை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடையுடன் தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், உண்ண உணவிற்கு உத்திரவாதம் அளித்திடும் வகையில் விலையில்லா அரிசியினையும், உடுத்த உடைக்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் விலையில்லா வேஷ்டி, சேலைகளையும், இருப்பிடத்திற்கு உத்தரவாதம் அளித்திடும் வகையில் முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,10,000ஃ- வரை வழங்கி வருகிறது.தமிழக அரசு கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு  ண உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவித்திட்டம், கல்வி பயில ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்புகள் குறித்தும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
மேலும், கருத்தரங்கில், சிறப்பாக பணியாற்றி மருத்துவர்கள், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி;, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 
இக்கருத்தரங்கில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. ாவுக்கரசு   இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.செல்வராஜ்   துணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.அசோகன்   தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.இளங்கோ   பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.குமார்   மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி.வசந்தி   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.மாரியப்பன்   மாவட்ட விரிவாக்க கல்வியாளர்  தி.பாண்டியம்மாள்   மருத்துவர் மரு.சக்திவேல்   மருத்துவ அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து