முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக இளைஞர் தினம் கொண்டாடுவதையொட்டி மினி மாரத்தான் ஓட்டத்தினை கலெக்டர் வீரராகவராவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.-மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உலக இளைஞர் தினத்தையொட்டி மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்   பேசும் பொழுது தெரிவித்ததாவது:
  ஐக்கிய நாடுகள், இளைஞர்கள் பற்றிய கவனத்தை அரசு மற்றும் இதர அமைப்புகள் உண்டாக்குவதற்கு 1999 ஆம் ஆண்டு முதல் “உலக இளைஞர் தினம்” ஆகஸ்ட் 12ஆம் திங்கள் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகளின் இந்த ஆண்டிற்கான முழக்கம் “இளைஞர்கள் அமைதியை மேம்படுத்துதல்” இந்த ஆண்டின் முழக்கத்தின் தொடர்பாக பல்வேறு வகையான நிகழ்வுகள் உலக இளைஞர்கள் தினத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
  இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது அமைகிறது.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியானது அச்சமுதாயத்தின் இளைஞர்களின் வளர்ச்சியை சார்ந்தது.  யூனஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் இரினா போகோவா கூறுவது யாதெனின் “அமைதிக்கு வழிநடத்தும் எந்தவொரு தீர்வுக்கும் இளைஞர்கள் அவசியம்” என்பதாகும்.  மேலும் இளைஞர்களை மாற்றத்திற்கான முகவர்கள் என்றும், பூசல் தடுப்பு மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதில் முக்கிய பாத்திரங்களாக விளங்குகின்றனர் என்ற அங்கீகாரம் இளைஞர்களுக்கு உள்ளது.
  தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் “உலக இளைஞர் தினம்” தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது.  இந்த உலக இளைஞர் தினத்தின் வாயிலாக எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே உண்டாக்குவதற்கு பல்வேறு நிகழ்வுகள் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  தமிழகத்தில் உள்ள 10 முக்கிய நகரங்களில் நெடுந் தொலைவு ஓட்டம் நடத்துவதற்கு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகின் மூலமாக (னுயுPஊரு) திட்டமிடப்பட்டுள்ளது.  அதேபோல், அரசு பல்கலைக்கழகங்கள் மூலமாக மண்டலம் வாரியாக போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு உலக இளைஞர் தினத்தை கொண்டாடுவதையொட்டி உறுதிமொழி எடுத்தல், நெடுந்தொலைவு ஓட்டம், போட்டிகள், உரையாடல்ஃவிவாதம் போன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  1000 மாணவர்கள், 500 மாணவிகள் கலந்து கொண்ட இந்த மினி மாரத்தான் ஓட்டமானது ரேஸ்கோர்ஸ் தொடங்கி நீதிமன்றம், கே.கே.நகர் பிரதானச்சாலை, சிவகங்கை நெடுஞ்சாலை, அண்ணா பேருந்து நிலையம் ஆட்சியரக சாலை வழியாக காந்தி மியூசியம் வரை நடைபெறுகிறது என தெரிவித்தார்.
  இந்நிகழ்ச்சியில் மதுரை மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் மரு.டி.மருதுபாண்டியன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கே.வி.அர்ஜீன்குமார், துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.ஏ.ஆர்.ராஜபிரகாஷ், நகர் நல அலுவலர் மரு.வி.சதீஸ்ராகவன், மாவட்ட திட்ட மேலாளர் (பொ) ப.ஜெயபாண்டி மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து