முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணிகள் குறித்து கலெக்டர் வெங்கடாசலம் ஆய்வு

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      தேனி
Image Unavailable

 தேனி.- தேனி மாவட்டம், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாநந்தபுரம்-குச்சனூர் (முல்லை பெரியாற்றின் குறுக்கே) இடையே 1.4 கி.மீட்டர் தூரத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி(நபார்டு)யின் மூலம் கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.632.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமானப்பணிகளை இன்று (30.08.2017)   கலெக்டர்   வெங்கடாசலம்,    செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 ஆய்விற்குப்பின்   கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழக அரசின் உத்தரவின்படி, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூலாநந்தபுரம்-குச்சனூர் (முல்லை பெரியாற்றின் குறுக்கே) இடையே 1.4 கி.மீட்டர் தூரத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி(நபார்டு)யின் மூலம் கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பாலத்தின் 4 தூண்களுடன் 9.95 மீட்டர் தூர சாலை வழி அகலத்தில், 7.50 மீட்டர் தூர வாகனப் பாதை அகலத்தில், இருபுறமும் 0.475 மீட்டர் தூரத்தில் வெளிப்புற விபத்து தடுப்பு சுவர், இருபுறமும் 0.750 மீட்டர் தூரத்தில் நடைபாதை மற்றும் கை பிடிகள் ஆகிய வசதிகளுடன் ரூ.632.50 இலட்சம் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு கிராமப்புற மக்களின் நிலையை கருத்தில் கொண்டு எண்ணற்ற வளர்ச்சித்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் இப்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் மூலம் பூலாநந்தபுரம், குச்சனூர், கோட்டூர், கூழையனூர் மற்றும் இக்கிராமங்களைச் சுற்றிவுள்ள 25,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள். விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை எளிதில் கொண்டு செல்லவும், மாணவ, மாணவியர்கள்; கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு  எளிதில் சென்று வர இப்பாலம் உறுதுணையாக அமைந்திடும். அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான்   ்கோயில்   திருவிழா நடைபெறும் காலங்களில் இப்பாலத்தின் மூலம் பொதுமக்கள் எவ்வித போக்குவரத்து இடையூறுமின்றி எளிதில் சென்று வர ஏதுவாக அமையும். மேலும், நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என   கலெக்டர்   வெங்கடாசலம்,   செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தின் போது, நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப்பொறியாளர்   முருகேசன்    உதவி கோட்டப்பொறியாளர்   கிருஷ்ணன்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்   ச.தங்கவேல்    உதவிப்பொறியாளர்   பாண்டியன்    உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)   அ.கதிரவன் உட்பட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து