முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட்டில் டூவீலர்கள் செல்லும் பாதை ஆம்புலன்ஸ்களின் அவசரகால வழியாக மாற்றம்: சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழிச்சாலையில் இயங்கி வரும் டோல்கேட்டில் டூவீலர்கள் செல்லும் பாதையை ஆம்புலன்ஸ்கள் செல்லும் அவசரகால வழியாக மாற்றப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நேரடி பார்வையில் இயங்கிடும் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.ஆபத்தான இடத்தில் அமைந்துள்ளதும் திருமங்கலம் நகருக்கு மிகவும் அருகாமையில் இருப்பதுமான இந்த டோல்கேட்டை வேறு இடத்திற்கு மாற்றி வலியுறுத்தி திருமங்கலம் பகுதி மக்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர்.இருப்பினும் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் குண்டும் குழியுமாக இருக்கும் நான்குவழிச்சாலையில் வசூல் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கப்பலூர் டோல்கேட் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.அண்மையில் மதுரை மேலூரைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கில் தேசிய நெடுஞ்சாலை எண்.67ல் பேட்டைவாய்த்தலை முதல் குளித்தலைவரையில் 10கிலோமீட்டர் தொலைவிற்கு மணல் அள்ளும் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த பகுதி தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன்,சுவாமிநாதன் அமர்வு,தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர்களையும்,சுங்க கட்டண வசூல் மைய அதிகாரிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டதுடன், சுங்க கட்டண வசுல் மையத்தில் ஆம்புலன்ஸ் வசதி,மீட்பு வாகன வசதி,பாதுகாப்பு கண்காணிப்பு வாகனவசதி உள்ளதா என்றும்,டோல் மையங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல தனிவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனவும்சாதாரண நாளில் ஒருவாகனம் டோல் மையத்தை கடந்து செல்ல ஆகும் நேரம் எவ்வளவு,அனைத்து டோல் மையங்களிலும் கழிப்பறை வசதி உள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்கு அனைத்து சுங்கச்சாவடி திட்ட இயக்குநர்கள் பதில் மனுதாக்கல் செய்த உத்தரவிட்டிருந்தனர்.
இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்த சுங்கச்சாவடிகள் தற்போது அவசர கதியில் மாற்று ஏற்பாடுகளை மனம்போன போக்கில் செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை செயல்படுத்துவதாக கூறி கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் பல்வேறு ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது.மீட்புவாகனம்,ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து வாகன வசதிகள் இங்கு செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரை சுமந்து வரும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக தரமான பாதை ஒதுக்கிடாமல் சாலையோரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒத்தையடி பாதையை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் ஆம்புலன்ஸ் செல்லும் அவசரகால பாதையாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே மூன்று அடி அகலத்தில் குண்டும் குழியுமாக உள்ள இருசக்கர வாகன பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் உயிரை கையில் பிடித்தபடியே செல்கின்றனர்.
இந்த நிலையில் இருசக்கர வாகனங்கள் சென்றிடும் குறுகலான ஒத்தையடி பாதையை ஆம்புலன்ஸ் செல்லும் பாதையாக கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் அறிவித்திருப்பதற்கு சமூக ஆர்வலர்களும்,இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் சர்வீஸ் ரோட்டின் கடைசியில் அமைந்திருக்கும் இருசக்கர வாகங்களுக்கான பாதையை ஆம்புலன்ஸ் செல்லும் பாதையாக மாற்றிடாமல் போதிய பாதுகாப்புடன் செயல்பட்டுவரும் ஐந்து நுழைவு பாதையில் ஏதாவது ஒன்றினை ஆம்புலன்ஸ் செல்வதற்கு ஒதுக்கி மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் செயல்படுத்திட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே மதுரை மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கப்பலூர் டோல்கேட்டில் டூவலீர் செல்லும் பாதையை ஆம்புலன்ஸ் செல்வதற்காக மாற்றியிருப்பதை தடைசெய்து ஆம்புலன்ஸ்கள் பாதுகாப்புடன் விரைவாக சென்றிட வசதியாக ஐந்து நுழைவு பாதையில் ஏதாவது ஒன்றை ஒதுக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து