முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நயினார்கோயில் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் வேளாண் வளர்ச்சி பணிகளை கலெக்டர் நடராஜன் ஆய்வு

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வேளாண்மைத்துறை மற்றும் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நயினார்கோயில் ஊராட்சியில் உள்ள மருதூர் கண்மாய்க்கான வரத்துக்கால்வாயினை புனரமைத்து எதிர்வரும் மழைக்காலத்தில் மழைநீரினை சேமித்திட ஏதுவாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், தேவை ஏற்படும் பட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்ட பணியாளர்களோடு கூடுதலாக ஜேசிபி போன்ற கனரக இயந்திரங்களையும் பயன்படுத்தி விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 அதேபோல வேளாண்மைத்துறையின் மூலம், விவசாயிகள் தரமான விதைகளைப் பெற்று பயனடையும் வகையிலும், விதைப்பண்ணை அமைத்திட விவசாயிகளை ஊக்குவித்திடும் வகையிலும் 50 சதவீத மானிய விலையில் தரமான விதைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கள்ளியடியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு.முனியையா என்பவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர்  நிலத்தில் 14 ரக கேழ்வரகு பயிரிட்டு விதைப்பண்ணை அமைத்துள்ளார். இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் கேழ்வரகு விதைகளை தர ஆய்வு செய்து அருகில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் உழவுப்பணிகளுக்கு தரமான கேழ்வரகு விதைகள் வழங்கப்படுகின்றன.  இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் இவ்விதைப்பண்ணைக்கு நேரடியாக வந்து பண்ணைப் பராமரிப்பு முறைகள் மற்றும் இதனால் பெறும் பயன்கள் குறித்து சம்பந்தப்பட்ட விவசாயிடம் கேட்டறிந்தார்.
 அதனைத் தொடர்ந்து, கங்கை கொண்டான் கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.4.75 கோடி மதிப்பில் புதிதாக கொள்ளனூர் பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இப்பாலத்திற்கான கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் துரிதப்படுத்தி விரைந்து முடித்திட வேண்டும் என அலுவலர்களிடத்தில் அறிவுறுத்தினார். மேலும் நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியம், பொட்டகுடி, வயலூர் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேலாண்மை (வேளாண்தை;துறை) சார்பாக தலா ரூ.1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்பிடி பகுதிகளை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில் இவ்விரு கண்மாய்களிலும் தலா ரூ.60 ஆயிரம் மதிப்பில் நீர் செறிவூட்டும் தண்டு அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மழைக்காலத்தில் கண்மாய்களில் நீர் நிரம்பும் வேளையில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இந்த கண்மாய் சீரமைப்பு பணிகளையும் கலெக்;டர் நேரடியாக கள ஆய்வு செய்தார்.
 முன்னதாக மாவட்ட கலெக்டர் காரேந்தல் கிராமத்தில் மாவட்ட நீர்;வடிப்பகுதி மேலாண்மை முகமையின் சார்பாக ஒருங்கிணைந்த பண்ணைகள் இயந்திரமயமாக்குதல் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.88 ஆயிரம் மதிப்பிலான மானியத்துடன் கூடிய வேளாண் உபகரணங்களை வழங்கினார்.  இந்த ஆய்வுகளின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சிவராணி, மாவட்ட கலெக்;டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.ராஜா, மாவட்ட நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்ட உதவி இயக்குநர் பாஸ்கரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து