முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆத்தூரில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு நேர்முகத்தேர்வு கைக்குழந்தைகளுடன் ஆர்வமோடு பங்கேற்ற பெண்கள்

புதன்கிழமை, 30 ஆகஸ்ட் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் நடந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. 58 முதன்மை அங்கன்வாடி காலிப்பணியிடங்களுக்கும், 2 குறு அங்கன்வாடி காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்து 350க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான நேர்முகத் தேர்வு குழந்தைகள் வளர்ச்சி திட்ட ஆத்தூர் வட்டார அலுவலர் பழனியம்மாள், வட்டார மருத்துவ அலுவலர் கௌசிகன், மாவட்ட திட்ட அலுவலக மேற்பார்வையாளர்  தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது.
கிராமம் வாரியாக விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு முறையாக டோக்கன்கள் வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. தேர்விற்கு வந்தவர்களிடம் கல்வி மற்றும் வயது, சான்றிதழ், இருப்படம் தொடர்பான குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்று, மாற்றுத்திறனாளிகள் என்றால் அதற்கான சான்று மற்றும் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து அதனை குறித்துக் கொண்டனர். காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெற்ற நேர்முகத்தேர்வில் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  நேர்முகத் தேர்வு நடந்த இடத்தில் மேற்பார்வையாளர் பானுமதி, இளநிலை உதவியாளர் ரஞ்சனி, அலுவலக உதவியாளர்கள் மஞ்சுளா, சுகுணா, பிரியங்கா, ராஜலட்சுமி உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து