முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளிக்குடி வட்டாரத்தில்செயல்படுத்தப்படும் திட்டங்கள்: கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்

வியாழக்கிழமை, 31 ஆகஸ்ட் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாவட்டம், ங்கலம் வட்டம், கள்ளிக்குடி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ்,  பார்வையிட்டார்.
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது:
  மதுரை மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் மூலம் இதுவரை மாவட்டம் முழுவதும் 5000 ஹெக்டேர் பரப்பளவில் பாசிப்பயறு, சோளம், பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்கள் மகசூல் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 5292 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  இவர்களுக்கு ரூ.90 இலட்சம் அரசின் மூலம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 
 சென்ற ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயிகள் இப்பயிர்களை பயிரிட முடியாமல் போனது.  தற்பொழுது இயற்கை கை கொடுத்ததாலும் மேலும் தமிழ்நாடு அரசின் இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் நன்மையை விளைவிக்கும் வகையில் அமைந்ததால் இந்த வருடம் அதிக விவசாயிகள் இப்பயிர்களை பயிரிட்டு பலன் பெற்று வருகின்றனர்.  இன்று (29.08.2017) மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டாரத்தில் மாவட்ட வேளாண்மைத்துறையில் நீடித்த நிலையான மானாவாரி வேளாண் இயக்கத்தின் கீழ் (ஆளுனுயு) எஸ்.பி.நத்தம் தொகுப்பில் கே.வெள்ளாகுளம், மேட்டுப்பட்டி கிராமத்தில் செயல்படுத்தப்படும் பாசிப்பயறு சாகுபடி செய்யப்பட்ட வயல்கள் (110 ஹெக்டேர்) பார்வையிடப்பட்டது.  இத்திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
 தேசிய உணவு பாதுகாப்பு திட்த்தின் கீழ் கள்ளிக்குடி வட்டாரத்தில் கள்ளிக்குடி கிராமத்தில் 100 ஹெக்டேர் தொகுப்பு செயல் விளக்க திடல் வயல்கள் ஆய்வு செய்யப்பட்டது.  இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.5000 மதிப்புள்ள விதை மற்றும் இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றது.  இதன் மூலம் விவசாயிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, வழங்கப்படும் இடுப்பொருட்களை கொண்டு பயிறு வகை உற்பத்தியை அதிகரித்து கொள்ள முடியும்.  எனவே விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர்    கொ.வீர ராகவ ராவ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 அதனைத்தொடர்ந்து தோட்டக்லைத்துறையின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான சொட்டு நீர் பாசனத்திட்டத்தின் மூலம் 3 ஏக்கர் பரப்பளவில் மருதங்குடி கிராமத்தை சேர்ந்த தனலெட்சுமி என்பவரது வயலில் அமைக்கப்பட்டுள்ள கொய்யா தோட்டத்தினை மாவட்ட கலெக்டர் அவர்கள் பார்வையிட்டார்.
 இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் செல்வபாண்டி, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) பூபதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் வாசுதேவன் (உசிலம்பட்டி கோட்டம்), வட்டாட்சியர் (ங்கலம்) நாகரத்தினம், உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், கள்ளிக்குடி வட்ட உதவி வேளாண்மை அலுவலர்கள் சமுத்திரப்பாண்டி, ணிபாலகுரு, கள்ளிக்குடி உதவி இயக்குநர் (வேளாண்மை) லீமாரோஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாமோதரன், கருணாகரன் உள்ளிட்ட வேளாண்மை மற்றும் வருவாய் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து