முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நீச்சல்போட்டி !

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் -ஸ்ரீவி.  கலசலிங்கம் பல்கலையில்  மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் சார்பில் அனைத்து  கல்லூரி மாணவர்களுக்கிடையே  நீச்சல்போட்டிகள்   பல்கலை  வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன்,  பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
பல்கலை துணைவேந்தர்  முனைவர் எஸ். சரவணசங்கர்  கொடியசைத்து  துவக்கி வைத்தார்.
காமாராஜ் பல்கலைக்கழக 16 கல்லூரிகளிலிருந்து 65மாணவ,  மாணவிகள்  பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார்கள்.
மதுரை காமராஜ்  பல்கலைக்கழக  உடற்கல்வி இயக்குநர்  முனைவர் வி. ஜெயவீரபாண்டியன் வரவேற்புரை வழங்கினார்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  லிங்கா குளோபல் பள்ளி முதல்வர்   முனைவர் அல்காசர்மா,  அருள்மிகு  பார்மஸி கல்லூரி முதல்வர்  முனைவர் வெங்கடேசன்,  கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  முதல்வர்  முனைவர் சந்திரா, பல்கலை  துணைப்பதிவாளர்  முனைவர் குருசாமிப்பாண்டியன்   ஆகியோர் சிறப்பு விருந்தினராககலந்துகொண்டு  கேடயங்களையும்,  சான்றிதழ்களையும் வழங்கினர்.
மாணவர் பிரிவில்  மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தார்கள், இரண்டாவது இடம் விருதுநகர் செந்தில் குமார் கல்லூரியும்,  மூன்றாவது இடம் ஜி டி என் கல்லூரியும் பெற்றன.
பெண்கள் பிரிவில் முதலிடம்  லேடிடோக் பெண்கள் கல்லூரியும்,  இரண்டாவது இடம் மதுரை  யாதாவா கல்லூரிக்கும்,  மூன்றாவது இடம்  விருதுநகர் செந்தில்குமார் கல்லூரிக்கும் கிடைத்தன.
ஓட்டுமொத்த சாம்பியன்  கேடயத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக  அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும்,  மாணவிகள்  பிரிவல்  லேடிடோக்  கல்லூரியும்  பெற்றார்கள்.
விழா ஏற்பாடுகளை உடற்பயிற்சி இயக்குநர்கள் விஜயலட்சுமி,  செல்வகுமார்,  செல்வகணேஸ்,  உதயகுமார்,  பேராசிரியர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்
கலசலிங்கம் கலைக்கல்லூரி முதல்வர்  முனைவர் சந்திரா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து