முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ளுவேல் கேம் - விளையாட்டு குறித்த விழிப்புணர்வு - கருத்தரங்கம்

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

 ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை, நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு மூலம் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ப்ளுவேல் - கேம் பற்றிய அபாயத்தை விளக்கி திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் தொடர்புத்துறை இணை இயக்குனர் மற்றும் இடையகோட்டை காவல்துறை இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
 இக்கருத்தரங்கில் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி அவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இந்த செல்போனில் ப்ளுவேல் கேம் பதிவிறக்கம் செய்து தருவதை குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் அறிறுருத்த வேண்டும். இந்த ப்ளுவேல்  கேம் விளையாட்டினால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே இனிமேல் இந்த கொடிய ப்ளுவேல் கேமை மாணவர்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கருத்தரங்கில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 இக்கருத்தரங்கில் திண்டுக்கல் மாவட்ட குற்றிவியல் தொடர்புத்துறை இணை இயக்குநர் ஜெயசிம்மராஜா, இடையகோட்டை காவல்துறை ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள், இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து