முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் கோவிலில் திருப்பவுத்திர உற்சவ விழா

சனிக்கிழமை, 2 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 அழகர்கோவில் - மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆவணி மாதம் இக்கோவிலில் திருப்பவுத்திர உற்சவ விழா நேற்று தொடங்கியது. இதில் மூலவர் சன்னதி அருகில் உள்ள சுந்தரபாண்டியன்கொரடு மண்டப வளாகத்தில் 108 வெள்ளிகலசங்கள் மற்றும் ஒரு தங்ககுடம் வைக்கப்பட்டு அதன் மீது தேங்காய், பழம், மாவிலை, வண்ணப்பூக்கள், செவ்வந்தி மாலைகளால் கலசமும், குடமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து உற்சவர் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாளுக்கு 136 வகையான வாசனை திரவியங்கள், மூலிகைகள் இணைந்த பூஜைகள் நடந்தது.
 தொடர்ந்து பஞ்சகவ்வியம், நெய், தேன், பால், சந்தனம், புஷ்பம், இளநீர், மஞ்சள், துளசி உள்ளிட்ட 36 வகையான அபிஷேகங்களும், நூபுரகங்கையிலிருந்து பிரத்தியேகமாக கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தின் சிறப்பு பூஜைகளும், மஹாதீபாராதனைகளும் நடந்தது. மாலையில் சர்வ அலங்காரத்தில் உற்சவர் சுந்தராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடும் நடந்தது. முன்னதாக பூஜையில் வைக்கப்பட்டிருந்த திருபவுத்திர பட்டு நூல் மாலைகள் மூலவர் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தராஜ பெருமாளுக்கும் மற்றும் கல்யாண சுந்தரவள்ளி தாயார், ஆண்டாளுக்கும் விசேஷ பூஜைகளுக்கு பிறகு அணிவிக்கப்பட்டது.
 இந்த விழாவானது வருகிற 6ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக திருபவுத்திர பூஜை பணிகளை சுந்தரநாராயண அம்பிபட்டர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து