முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் - மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் கலெக்டர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 3 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.--திருமங்கலம் வட்டம் கப்பலூர் தியாகராசர் மில்ஸ் எதிரில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  . எடப்பாடி மு பழனிசாமி அவர்களால் வருகின்ற 07.09.2017 அன்று நேரில் திறக்கப்படவுள்ளது. இந்த கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்   கொ.வீர ராகவ ராவ்,  முன்னேற்பாடு பணிகள் குறித்து  நேரில் ஆய்வு செய்தார்.
 திறப்புவிழா காணவிருக்கும் இக்கல்லூரி கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூ.7.25 கோடி ஆகும். இக்கட்டிடம் தரை மற்றும் இரண்டு அடுக்குகள் கொண்டவை ஆகும். இதில் 14 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், 1 பயிற்சிப்பட்டறை அரங்கம், 1 நூலகம், 1 சுகாதார மையம், 1 கூட்டுறவு அங்காடி ஆகியவை அமைக்கப்படவுள்ளது.
 காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி கட்டுவதற்காக 8.53 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது கட்டப்பட்டுள்ள கட்டிடம் 49,583 சதுர அடியில் அமைந்துள்ளது. இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.குணாளன், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து