முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓவியாவை மறக்கவே மாட்டேன், நான் உயிரோடு இருக்க ஒருவரே காரணம்: தயாரிப்பாளர் செல்வம். பேட்டி

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

வேலம்மாள் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் தயாரித்துள்ள படம் சீனி (ஒவியாவை விட்டா யாரு ) பிக்பாஸ் மூலம் தமிழக ரசிகர்களிடையே திடிர் புகழ் பெற்ற ஒவியா ஒரு யானையுடன் தோழியாக இணைந்து நடித்திருக்கிறார். சீதா எனும் அந்த யானை மற்றும் நாயகி ஒவியாவுடன் புதுமுகம் சஞ்சீவி நாயகனாக நடிக்க கஞ்சா கறுப்பு, வையபுரி, சினேகன், ராதாரவி, செந்தில், சரவணன், மனோஜ்குமார், பவர்ஸ்டார் சீனிவாசன், ஆகியோருடன் காமெடி நடிகராக அறிமுகமாகிறார் பரத்.

ஒரு படித்த இளைஞந் உழைப்பை கொண்டு ராஜதுரை இயக்கியிருக்கும் இந்த படம் நல்ல மெசேஜ் சொல்லும் படமாகவும் இருக்கும் என்கிறார். இந்த படத்தை இயக்கியுள்ள ராஜதுரை .இவர் இயக்குனர் சுராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிபிடத்தக்கது.இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் இசைமைத்துள்ளார்.

நாகராஜ் ஒளிபதிவு செய்துள்ளார். அன்மையில் டிசர் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது .
படம் குறித்து செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  ஓவியா இன்று வரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவரை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். ஓவியாவுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன்.என் தயாரிப்பு பயணத்தில் தூண் போன்று உறுதுணையாக உள்ளவர் ஓவியா.

இந்த நேரத்தில் நான் பலருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால் என் வலி, வேதனையால் கண்ணீர் தான் வருகிறது.நான் பல கஷ்டங்களை தாண்டி வந்துள்ளேன். என் மனைவி, குழந்தைகள் கூட என்னை கைவிட்டுவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்தவர் ஒருவர் தான். அவர் தான் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கதிரேசன்.

கடந்த ஓராண்டாக நான் உயிருடன் இருக்க காரணமே கதிரேசன் தான். அவருக்கு எப்பொழுதும் நன்றி தெரிவித்துக் கொண்டே இருப்பேன். கதிரேசன், விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவு இருக்கும் வரை நான் இன்னும் 5 படங்களை தயாரிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.ஓவியாவ விட்டா யாரு படம் விரைவில் ரிலீஸாகும். என் கஷ்ட காலத்தில் என்னுடன் இருந்த டிசைனர் ஸ்ரீதர், மேனேஜர் சுவாமிநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் செல்வம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து