முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் திண்டுக்கல். சி. சீனிவாசன் தலைமையில் வனத்துறையின் 5 மாவட்டங்களுக்கான ஆய்வுக் கூட்டம்

திங்கட்கிழமை, 4 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாவட்ட வன அலுவலகத்தில் 04.09.2017 அன்று வனத்துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்.சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் வனத்துறைத் தலைவர்   ர். பசுவராஜ், இ.வ.ப, மதுரை வன விரிவாக்க மண்டல தலைமை வனப்பாதுகாவலர்,   டெபாஸிஸ் ஜானா,   மதுரை மண்டல வனப்பாதுகாவலர்  ராகேஷ் குமார் ஜகெனியா,   மதுரை மாவட்ட வன அலுவலர்,   சமர்தா,   சிவகங்கை மாவட்ட வன அலுவலர்,  மாரிமுத்து,   தேனி மாவட்ட வன அலுவலர்,   ராஜேந்திரன்,   மற்றும் மதுரை, விருதுநகர் மண்டலங்களைச் சார்ந்த 5 மாவட்டங்களின் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுமார் 4.9 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் தேனி மதுரை மாவட்டங்களுக்குட்பட்ட வைகை நதி புனரமைப்பு திட்டம், தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் இம்மண்டலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, தேனி வன மேம்பாட்டு முகமைகளில் செயலாக்கம் செய்யப்படும் திட்டப்பணிகள், யானைகள் திட்டம், வறட்சிக்காக மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள், வன உயினங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல் போன்ற திட்டங்களோடு வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வு செய்தார்.
நடப்பு 2017-18ம் ஆண்டுக்குரிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் மதுரை மற்றும் விருதுநகர் மண்டலங்களின் வனப் பரப்பை அதிகரிப்பது மற்றும் வன விலங்கு மோதலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்கான நிவாரணத்தை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் கேட்டுக்கொண்டார். அதனையொட்டி தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 245 பயனாளிகளுக்கு ரூ.14,50,000  கடனுதவியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து