முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வியின் தரம் அந்நாட்டு ஆசிரியர்களின் தரத்தை பொறுத்தே அமைகிறது ஆசிரியர் தினவிழாவில் துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை பேச்சு

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை,-   கல்வியின் தரம் அந்த நாட்டு ஆசிரியர்களின் தரத்தை பொறுத்தே அமைகிறது என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர்கள் தினவிழாவில் துணை வேந்தர் பி.பி.செல்லத்துரை பெருமை பட தெரிவித்தார்.
 மதுரை காமராசர் பல்கலைக்கழகம்  சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ம் தேதியை ஆசிரியர் தின விழாவாக ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகிறது.சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு சிறப்புமிக்க அறிஞர், மேதை, மற்றும் பாரத ரத்னா விருது பெற்றவர். இந்த வருட ஆசிரியர் தின விழாவில் எம்.ஜி.ஆரின் எழுச்சி மிக்க பாடல் “ ஒரு தாய் மக்கள் நாம் என்போம். என்ற பாடலுடன் தொடங்கியது. இப்பாடலை துணைவேந்தர் மற்றும் மூத்த பேராசியர்கள் இணைந்து பாடினார்கள்.மாணவியரின் சிறப்புமிக்க நடனம் துணைவேந்தர் பாடலுக்கு அழகு சேர்த்தது போல் இருந்தது.
 விழாவில் கல்வியியல் துறைத்தலைவர் பேராசிரியர் ஏ.முத்துமாணிக்கம் வரவேற்புரை வழங்கினார். அவரது உரையில் துணைவேந்தர் மேற்கொண்ட பல்வேறு பல்கலைக்கழக நலன் சார்ந்த காரியங்களில் துணைவேந்தரின் இடையராத பணியின் மேன்மையை பற்றி எடுத்து கூறினார்.
 துணைவேந்தர் மற்றும் பதிவாளர் சிறப்பு விருந்தினரை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். விழா நாயகனான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்  முக்கிய பொறுப்பாளர்களான, துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர், ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,  கல்வி வளர்ச்சி அதிகாரி மற்றும் மூத்த பேராசிரியர்கள் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து கௌரவித்தனர்.
 இந்த விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் பி.பி.செல்லத்துரை  தனது உரையை மாணவர்கள் மத்தியில் ஆற்றினார். அவர் தனது உரையில் மாணவர்களுக்கு தேவையான அறிவையும் ஆற்றலையும் வழங்கி அவர்களை சமுதாயத்தில் பொறுப்புமிக்க குடிமக்களாக மாற்றுவதில் ஆசிரியர்களின் தேவையை எடுத்துரைத்தார். அப்போது துணைவேந்தர் தன் உரையில் ஒரு அழகிய பொன்மொழியை கூறினார்.
“ஒரு தேசத்தின் மதிப்பீடு அந்த குடிமக்களின் தரத்தை சார்ந்தது”, “குடிமக்களின் வாழ்வின் தரம் அந்த தேசத்தின் தரத்தை சார்ந்தது”,கல்வியின் தரம் அந்த நாட்டின் ஆசிரியர்களின் தரத்தை பொறுத்தது. துணைவேந்தர் தனது உரையில் மாவீரன் அலெக்சாண்டர் உருவாக்கியதில் மாபெரும் அறிஞர் அரிஸ்டாடிலின் பங்கு எத்தனை வலிமையானது என்பதனை விளக்கினார்.
 பல்கலை மற்றும் மாணவர்கள் நலனுக்காக தான் என்நேரமும் உழைக்க முனைப்போடு இருப்பதையும், இச்சிறப்புமிக்க தருணத்தில் துணைவேந்தர் எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு இத்தருணத்தில் துணைவேந்தர் இரண்டு திருக்குறளை மேற்கோளாக கூறினார்.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் என கேட்டதாய்”,“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனும் சொல். இவ்வாறு துணைவேந்தர் தனது உரையில் தெரிவித்தார்.
 சிறப்பு விருந்தினர் முனைவர். விஜயகுமார், மூட்டாவின் முன்னாள் செயலாளர் மாணவர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் வலிமையான பங்கு குறித்து எடுத்துரைத்தார். அன்னார் தமது உரையில் சமுதாயத்தின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சாவித்தரிபுலே மற்றும் உமர்முப்தார் போன்ற சமூக போராளிகளை மாணவர்களுக்கு மேற்கொள்காட்டினார்.
 பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா அவரது உரையில் தனது வாழ்க்கையில் கடந்து வந்த சிறப்பான ஆசிரியர்களை பற்றி நயம்பட எடுத்துரைத்தார். தேசநலன் என்பது மாணவர்கள் நலன் சார்ந்தது என்பதையும் வலியுறுத்தினார்.
 ஆசிரியர் தின விழா சிறப்பம்சமாக நடந்த பட்டிமன்றத்தில்            “மாணவர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆசிரியர்களின் அன்பா? அல்லது ஆசிரியர்களின் அறிவா என்ற விவாதம் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.
 நடுவர் தமது சீர்மிக தீர்ப்பை ஆன்றோர் சான்றோர் பெருமக்கள் மத்தியில் ஆற்றினார். அதில் மாணவர்களின் நலன் என்பது ஆசிரியர்களின் அன்பு அக்கறை மற்றும் அறிவு என்ற அனைத்து விசயங்களையும் சார்ந்தவை என்ற தீர்ப்பை வழங்கினார். இச்சிறப்பான விழாவினை பல்கலைகழகத்தின் நலனுக்காக பல ஆண்டுகள் உழைத்த பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கௌரவிக்கும் சிறப்பான நிகழ்வுடன் நிறைவுப்பெற்றது.
 விழா முடிவில் டாக்டர் மு.சந்திரசேகர் நன்றி தெரிவித்து பேசினார்.
 இந்நிகழ்ச்சிக்கு முன் பல்கலைக்கழகத்தில் உள்ள பல புதிய கட்டிடங்களை துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை திறந்து வைத்தார். அதில் குறிப்பாக கல்வியில்துறை கட்டிடத்தை திறந்து வைத்து அதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து