முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் வாலிபரின் புதிய முயற்சி விதவிதமான 736 டீ கப்புகளை சேகரித்து உலக சாதனை

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் வாலிபர் விதவிதமான அச்சுகள் பொரிக்கப்பட்ட 736 டீ கப்புகளை சேகரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
      ராமநாதபுரம் முத்துராமலிங்க சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்டராமன் என்பரின் மகன் சங்கரநாராயணன். எம்.இ பட்டதாரியான இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை வாயினால் ஊதி அணைத்து கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் தேனீர் அருந்தும் கப்புகள், ஜுஸ் கப்புகள் என பேப்பர் கப்புகளை விதவித அச்சுகள் பொரிக்கப்பட்டுள்ளவையாக சேகரித்துள்ளார். மேற்கண்ட கப்புகளில் வெவ்வேறு வண்ணங்களில் விதவிதமான வடிவங்கள் அச்சுகளாக பொரிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு விதவிதமான 736 கப்புகளை சேகரித்து புதிய சாதனை படைத்துள்ளார். 
    வாலிபரின் இந்த சாதனையை உலக சாதனையாக அங்கீகரிக்கும் வகையில் ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கண்ணன்கோவில் வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் வீரபூபதி, ராமநாதபுரம் செய்தியாளர் சங்க தலைவர் ஜெகஜோதி, மாவட்ட தகவலியல் அலுவலர் ராஜசேகர், பட்டணம்காத்தான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாகதிரேசன், அரிமா சங்க பட்டய தலைவர் சதீஸ், தேன்கூடு நிறுவனர் பிரபாகரன், டாக்டர் பிரேமாசுப்பிரமணியன் மற்றும் ராமநாதபுரம் செய்தியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் வாலிபர் சங்கரநாராயணன் இந்த சாதனைக்காக தனக்கு பக்கபலமாக இருந்த தனது அண்ணன் விஜயராகவன் துணையுடன் தான் சேகரித்த 736 கப்புகளை காட்சிபடுத்தி சாதனையை நிகழ்த்தி காட்டினார். உலக சாதனையாளர் சங்கரநாராயணனின் அண்ணன் சுந்தரம் கடந்த 2009-ம் ஆண்டு 398 ஸ்ட்ராக்களை வாயில் வைத்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவரின் தங்கை ரமா என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு 549 எண்ணிக்கையில் தலையில் மாட்டும் ஹேர்கிளிப்புகளை சேகரித்து கின்னஸ் மற்றும் லிம்கா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து