முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை _மயிலாடுதுறை பயணிகள் ரயிலுக்கு அய்யலூரில் மக்கள் சிறப்பான வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 5 செப்டம்பர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - நெல்லை _ மயிலாடுதுறை ரயிலுக்கு அய்யலூர் ரயில் நிலையத்தில் மக்கள் மற்றும் வர்த்தகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அகல ரயில் மாற்றத்திற்கு பிறகு திண்டுக்கல் _ திருச்சி, மதுரை _ விழுப்புரம் பயணிகள் மட்டுமே அய்யலூர் ரயில் நிலையத்தில் நின்றுசெல்கிறது. மதிய வேளையில் இந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில் மட்டும் நிற்காமல் சென்றது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அய்யலூர் பகுதி மக்கள் கடந்த 2014ம் ஆண்டு ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு மாதங்களில் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் அதன்பிறகு மாறுதலாகி சென்று விட்டார்.
இதனையடுத்து மாவட்ட கலெக்டருக்கு அய்யலூர் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை அளித்தனர். கலெக்டர் வினய் இதுகுறித்து ரெயில்வே கோட்ட மேலாளர் நினுஇத்யராவிடம் எடுத்துக் கூறினார். இதனையடுத்து அய்யலூர் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 5ம் தேதி முதல் மயிலாடுதுறை ரயில் நின்று செல்லும் என அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மதியம் 12.25 மணிக்கு அய்யலூர் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். என்ஜின் டிரைவருக்கு மாலை அணிவித்தும், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த ரயில் தினமும் நெல்லையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் போது மதியம் 12.27 மணிக்கும், மயிலாடுதுறையில் இருந்து நெல்லை செல்லும் போது மதியம் 3.15 மணிக்கும் நின்று செல்லும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து